கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட்கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு + "||" + ODI cricket rankings Viratkoli, Bumrah Extending the number one

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட்கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட்கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவில் ஒருநாள் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.
லண்டன்,

அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி (125 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி (122 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறது. நியூசிலாந்து அணி (112 புள்ளிகள்) 3-வது இடமும், ஆஸ்திரேலிய அணி (111 புள்ளிகள்) 4-வது இடமும், தென்ஆப்பிரிக்க அணி (110 புள்ளிகள்) 5-வது இடமும், பாகிஸ்தான் அணி (97 புள்ளிகள்) 6-வது இடமும், வங்காளதேச அணி (90 புள்ளிகள்) 7-வது இடமும், இலங்கை அணி (79 புள்ளிகள்) 8-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் அணி (77 புள்ளிகள்) 9-வது இடமும், ஆப்கானிஸ்தான் அணி (59 புள்ளிகள்) 10-வது இடமும் வகிக்கின்றன.


பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர்கள் விராட்கோலி (891 புள்ளிகள்) முதலிடத்திலும், ரோகித் சர்மா (885 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (814 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (406 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.