கிரிக்கெட்

ரவி சாஸ்திரி பதவி நீடிக்குமா? பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பம் கோருகிறது பிசிசிஐ + "||" + BCCI To Invite Fresh Applications For Support Staff, Ravi Shastri Will Have To Re-Apply

ரவி சாஸ்திரி பதவி நீடிக்குமா? பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பம் கோருகிறது பிசிசிஐ

ரவி சாஸ்திரி பதவி நீடிக்குமா? பயிற்சியாளர் பொறுப்புக்கு  விண்ணப்பம் கோருகிறது பிசிசிஐ
இந்திய அணியின் பயிற்சிக்குழுவின் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவுக்கு வருகிறது.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்குழுவான ரவிசாஸ்திரி, சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகள் தொடருடன் இவர்களது பதவிக்காலம் முடிகிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் பயிற்சியாளர், உதவிப்பயிற்சியாளர்களாக மீண்டும் பிசிசிஐ-யிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய அணி உலக கோப்பை அரை இறுதி போட்டியில் படு தோல்வி அடைந்து வெளியேறியதையடுத்து, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரவிசாஸ்திரி பதவிக்காலம் நீடிப்பது கடினம் என்று தெரிகிறது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.