கிரிக்கெட்

விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம் ; ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்பு + "||" + BCCI to Invite Fresh Applications for Support Staff, Ravi Shastri Required to Re-Apply

விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம் ; ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்பு

விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம் ;   ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்பு
தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்து விட்டது.

இதையடுத்து, அடுத்த மாதம் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அவர்களின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து,  வருகிற ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தகுதி அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கிடையே, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து, ரவி சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்
இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.
2. 2019ஆம் ஆண்டின் ஐசிசி விருதுக்கு விராட் கோலி- ரோகித் சர்மா தேர்வு
2019ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கும், சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருது இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
4. 2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க தான் டைவ் அடித்திருக்க வேண்டும் என்று எம்.எஸ்.தோனி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
5. காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வென்று காட்டுவோம்-ஆஸ்திரேலியா
காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம் என கேப்டன் பிஞ்ச் கூறினார்.