கிரிக்கெட்

தெண்டுல்கரின் கனவு அணியில் டோனிக்கு இடமில்லை + "||" + In the World Cup Dream Team released by Sachin Tendulkar 5 Indian players

தெண்டுல்கரின் கனவு அணியில் டோனிக்கு இடமில்லை

தெண்டுல்கரின் கனவு அணியில் டோனிக்கு இடமில்லை
உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு, சச்சின் டெண்டுல்கர் தனது கனவு அணியை தேர்வு செய்துள்ளார்.
புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் நிறைவடைந்ததும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்த கனவு அணியில் இந்தியாவில் இருந்து ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம் பிடித்திருந்தனர். இந்த கவுரவ அணியில் கேப்டன் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.


இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் இருந்து 11 பேரை தனக்கு பிடித்தமான அணியாக தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அவரது கனவு அணியில் 5 இந்திய வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் மூத்த விக்கெட் கீப்பர் டோனி சேர்க்கப்படவில்லை.

தெண்டுல்கரின் கனவு அணி வருமாறு:- ரோகித் சர்மா (இந்தியா), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), வில்லியம்சன் (கேப்டன், நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா (3 பேரும் இந்தியர்), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து).