கிரிக்கெட்

வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது + "||" + Bangladesh cricket team to tour Sri Lanka

வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது

வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது
வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

* வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி கொழும்பில் நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காளதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை தொடரில் 2 சதம் உள்பட 606 ரன்னும், 11 விக்கெட்டும் வீழ்த்திய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ஹஜ் புனித பயணம் செல்வதால் அணியில் இடம் பெறவில்லை. திருமணம் நடைபெற இருப்பதால் லிட்டான் தாஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மோர்தசா கேப்டனாக தொடருகிறார்.

* உலக கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், தனது நெருங்கிய உறவினர் இறந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு சாதித்து இருப்பதாக அவரது தந்தை பிராங் ஆர்ச்சர் கூறியுள்ளார். இந்த உலக கோப்பையில் ரன்னின்றி (371 டாட் பால்) அதிக பந்துகளை வீசியவர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆவார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2. ராமநாதபுரம் அருகே பரபரப்பு: இலங்கைக்கு கடத்த துப்பாக்கி - தோட்டாக்களை வீட்டில் பதுக்கிய பெண் - கைது செய்து தீவிர விசாரணை
இலங்கைக்கு கடத்து வதற்காக துப்பாக்கி, 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
3. வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரஸ்செல் டொமிங்கோ தேர்வு
வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரஸ்செல் டொமிங்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4. நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
5. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம்: ரனில் விக்ரமசிங்கே
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.