கிரிக்கெட்

ஜூனியர் கிரிக்கெட்: சென்னை வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தல் + "||" + Junior Cricket: Chennai player double century

ஜூனியர் கிரிக்கெட்: சென்னை வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தல்

ஜூனியர் கிரிக்கெட்: சென்னை வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தல்
ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் சென்னை வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
சென்னை,

8 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் (12 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் போட்டி சென்னை நந்தனத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்ஸ்-செயின்ட் பேட்ரிக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் பீட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் சைலேஷ் தேவ் 93 பந்துகளில் 43 பவுண்டரி, 2 சிக்சருடன் 204 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் ஆடிய செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 26 ஓவர்களில் 111 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி 201 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.