கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு? + "||" + West Indies series fully decided to play Kohli?

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு?

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு?
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி நடக்கிறது.


இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடருக்கு விராட் கோலிக்கு ஓய்வு அளித்து விட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும், டெஸ்ட் தொடருக்கு கோலி அணிக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தான் விளையாட விரும்புவதாக இந்திய கேப்டன் விராட் கோலி, தேர்வு குழுவினரிடம் கூறியுள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் கோலி முழுமையாக இடம்பெற வாய்ப்புள்ளது. அதே சமயம் மூத்த விக்கெட் கீப்பர் டோனி தேர்வு செய்யப்படமாட்டார், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.