சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி


சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
x
தினத்தந்தி 19 July 2019 5:39 AM GMT (Updated: 19 July 2019 11:03 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கி ஐசிசி சிறப்பித்துள்ளது.

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரரான இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘ஹால் ஆப் பேம்’ விருதை வழங்கி கவுரவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனை படைத்தவர்களுக்கு அவர்கள் ஓய்வுக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு, உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ‘ஹால் ஆப் பேம்’ விருதை பெறும் 6-வது இந்திய வீரர் தெண்டுல்கர் ஆவார்.

இந்த கவுரவம்  இந்தியா சார்பில் ஏற்கெனவே பிஷன் சிங் பேடி(2009), சுனில் கவாஸ்கர்(2009),கபில் தேவ்(2009),அனில் கும்ப்ளே(2015), ராகுல் டிராவிட்(2018) ஆகியோர் பெற்றுள்ளனர்.

Next Story