கிரிக்கெட்

இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் தோனியிடம் இல்லை: நீண்ட கால நண்பர் அருண் பாண்டே தகவல் + "||" + MS Dhoni has no immediate plans to retire, says longtime friend

இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் தோனியிடம் இல்லை: நீண்ட கால நண்பர் அருண் பாண்டே தகவல்

இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் தோனியிடம் இல்லை: நீண்ட கால நண்பர் அருண் பாண்டே தகவல்
இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் தோனியிடம் இல்லை என்று அவரது நீண்ட கால நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.
மும்பை, 

உலக கோப்பை தொடரில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தோனி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. தோனி தனது எதிர்கால திட்டம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர். சில வீரர்கள் தோனிக்கு ஆதரவாகவும் கருத்து கூறி வருகின்றனர். 

இந்த நிலையில்,  இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் தோனியிடம் இல்லை என்று அவரது நீண்ட கால நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.   அருண் பாண்டே கூறியிருப்பதாவது: “ஓய்வு பெறும் திட்டம் உடனடியாக ஏதுமில்லை.  ஒரு மிகச்சிறந்த வீரர்  ஓய்வு குறித்த யூகங்கள் துரதிருஷ்டவசமானது” என்றார்.  

பாண்டே, தோனியுடன் நீண்ட காலமாக இருந்து வருகிறார், தோனியின் வர்த்தக நலன்களை இவர் பார்த்துக் கொள்வதோடு, ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனமான ரீதி ஸ்போர்ட்ஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.