கிரிக்கெட்

எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல் + "||" + MS Dhoni makes himself 'unavailable' for India's West Indies tour

எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்

எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து  நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு  தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை,

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன. 

டோனியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே, அவரது விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸூக்கு தலைமை தாங்குவதோடு தனது வணிக நலன்களை கவனித்து வருகிறார். பி.டி.ஐ.க்கு பேட்டியளித்த அருண் பாண்டே, டோனி ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை. அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்கள் வருவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுசெய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் டோனி தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார்.  பிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ  லெப்டினன்ட் கர்னல் ஆவார் டோனி .

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த  பேட்டியில் கூறி இருப்பதாவது:-

"நாங்கள் மூன்று விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். எம்.எஸ். டோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர் முன்னர் செய்த தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வு நாளை எடுத்து உள்ளார். கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு  தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரின் முடிவை நாங்கள் இப்போது அறிவித்துள்ளோம் என கூறினார்.