கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் + "||" + Sudden trouble the Indian batsmen in cricket World Cup season

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. ஆனால் அதையும் மீறி மூத்த வீரர் ஒருவர் உலக கோப்பை போட்டி நடந்த 7 வார காலமும் தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்த விஷயம் இப்போது கசிந்துள்ளது. மனைவி தன்னுடன் கூடுதல் நாட்கள் தங்குவதற்கு அவர் கேப்டன் அல்லது பயிற்சியாளர் யாருடைய அனுமதியையும் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் குறிப்பிட்ட இந்த விதிமுறையை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை