கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன் + "||" + The manner in which the World Cup was won in cricket is unfair - Morgan

உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்

உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற விதம் நியாயமற்றது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் நின்றது. ஆனாலும் அதிக பவுண்டரி அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இரு அணிகளும் பெரிய வித்தியாசமின்றி மிக நெருக்கமாக ஆடிய நிலையில், இந்த மாதிரி முடிவு கிடைத்து கோப்பையை வென்றதை நியாயமானது என்று சொல்ல முடியாது. களத்தில் நடந்தது என்ன என்பதை அறிவேன். ஆனாலும் போட்டியின் முடிவில் என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்றார்.