கிரிக்கெட்

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற டோனிக்கு ராணுவ தளபதி அனுமதி + "||" + MS Dhoni s request to train with the Indian Army has been approved by General Bipin Rawat

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற டோனிக்கு ராணுவ தளபதி அனுமதி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற டோனிக்கு ராணுவ தளபதி அனுமதி
இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற டோனிக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கிறார். டோனி அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். உலகக்கோப்பை தோல்விக்குப் பின் டோனியின் ஓய்வு தொடர்பாக தொடர் விவாதம் நடக்கிறது.  இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் டோனிக்கு இடம் கிடைக்கவில்லை.  இந்நிலையில் ராணுவ குழுவுடன் பயிற்சியை மேற்கொள்ள டோனி அனுமதியை கேட்டிருந்ததாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற டோனிக்கு ராணுவ தளபதி அனுமதி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களுடன் அவர் பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதியில் பயிற்சியை பெறலாம் என கூறப்படுகிறது. ஆனால் ராணுவ நடவடிக்கையில் அவர் பங்குபெற அனுமதி வழங்கப்படாது எனவும் ராணுவ தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
2. லடாக் ஏரி பகுதியில் இந்திய- சீன வீரர்கள் மோதல்: இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது
நமது வீரர்கள் நமது எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இரு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
3. தென்ஆப்பிரிக்க 20 ஓவர் தொடரில் டோனியை ஓரங்கட்ட திட்டம்
தென்ஆப்பிரிக்க 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் டோனியை சேர்க்காமல் ஓரங்கட்ட தேர்வு குழுவினர் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
4. எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத்
எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
5. இளைஞர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பயிற்சி - டோனி திட்டம்
ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கி இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க டோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.