கிரிக்கெட்

அடுத்த உலககோப்பை பாருங்கள்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சரிசெய்வேன் -இம்ரான் கான் சபதம் + "||" + PM Imran Khan promises to fix Pakistan cricket

அடுத்த உலககோப்பை பாருங்கள்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சரிசெய்வேன் -இம்ரான் கான் சபதம்

அடுத்த உலககோப்பை பாருங்கள்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சரிசெய்வேன் -இம்ரான் கான் சபதம்
பாகிஸ்தான் அணியை சரிசெய்ய முடிவு செய்துள்ளேன் என அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றி உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடனே வெளியேறியது. இதனால் உலகக் கோப்பை தொடரில் கேப்டனாகச் செயல்பட்ட சர்ப்ராஸ் கான் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகள் மற்றும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி தொடங்குவதற்கு, முன் இந்த மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், அடுத்த வருடம் டி-20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால், ஒருநாள் போட்டிகளைக் குறைத்துக்கொண்டு, டி-20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரசுமுறை பயணமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடன் இம்ரான் கான் உரையாடினார். அப்போது பேசியவர், கூறியதாவது:-

“நான் இங்கிலாந்து சென்றேன். அங்கு கிரிக்கெட் விளையாட  கற்றுக்கொண்டேன். நாங்கள் அங்கிருந்து திரும்பியபோது, மற்ற வீரர்களின் தரத்தை உயர்த்தினோம். தற்போது, உலகக் கோப்பை முடிந்துள்ளது. பாகிஸ்தான் அணியை சரிசெய்ய முடிவுசெய்துள்ளேன். எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த உலகக் கோப்பையில், நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி ஒரு தொழில்முறை அணியாக இருக்கும். நாங்கள், எங்களது அமைப்புகளைச் சரிசெய்ய உள்ளோம். திறமையாளர்களை வெளிக்கொண்டு வருவோம்'' என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன? - பரபரப்பு தகவல்கள்
கடன் பிரச்சினையால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்
இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
3. கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இறுதி பட்டியலில் 6 பேர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இறுதி பட்டியலில் 6 பேர் இடம் பெற்று உள்ளனர்.
4. டோனியின் ஆடம்பர கார் வரிசையில் சேர்ந்த மற்றொரு கார்
டோனியின் புதிய பொம்மை என கார் படத்தை வெளியிட்ட சாக்ஷி சிங் டோனி.
5. காஷ்மீர் விவகாரம் குறித்து சவூதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பாக்.பிரதமர் பேச்சு
காஷ்மீர் விவகாரம் குறித்து சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.