இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு


இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
x
தினத்தந்தி 23 July 2019 10:07 AM GMT (Updated: 23 July 2019 10:07 AM GMT)

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதையடுத்து லசித் மலிங்கா ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே  3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளுக்கான முதல் போட்டி வரும் 26 ஆம் தேதி நடக்கிறது. அந்தப் போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து லசித் மலிங்கா
 
ஓய்வு பெறுகிறார் என இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே தகவல் தெரிவித்துள்ளார்.

மலிங்கா இதுவரை இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலக கோப்பை தொடர்களில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் இலங்கை அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

Next Story