கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 148 ரன்கள் சேர்ப்பு + "||" + TNPL Over 20 cricket Chepauk Super Gillies scored 148 runs

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 148 ரன்கள் சேர்ப்பு

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 148 ரன்கள் சேர்ப்பு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும்  திருச்சி வாரியர்ஸ்  அணிகளுக்கு இடையேயான 6-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக  கவுசிக் காந்தி மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ களமிறங்கினர். இதில் கவுசிக் காந்தி 1  ரன்னில் கேட்ச் ஆனார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கோபிநாத் மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  இதில் கோபிநாத் 37  ரன்களிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 26  ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சசிதேவ் 12  ரன்னில் கேட்ச் ஆனார். பின்னர் இணைந்த முருகன் அஸ்வின் மற்றும் ஹரிஷ்குமார், அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இதில் அதிரடி காட்டிய ஹரிஷ்குமார் 39 ரன்களிலும்,  முருகன் அஸ்வின் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் டி.ராகுல்  2 ரன்னுடனும், ஆரிப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

திருச்சி வாரியர்ஸ் அணியில் சரவணகுமார் 2 விக்கெட்டுகளும், எல்.விக்னேஷ், கே.விக்னேஷ், சாய்கிஷோர், பொய்யாமொழி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி களமிறங்க உள்ளது.