கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட்டில் விலகிய பிறகு 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் - மலிங்கா பேட்டி + "||" + After quitting cricket one day, I will continue to play in the 20-over match - interview with Malinga

ஒரு நாள் கிரிக்கெட்டில் விலகிய பிறகு 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் - மலிங்கா பேட்டி

ஒரு நாள் கிரிக்கெட்டில் விலகிய பிறகு 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் - மலிங்கா பேட்டி
ஒரு நாள் கிரிக்கெட்டில் விலகிய பிறகு 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என மலிங்கா தெரிவித்தார்.
கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான மலிங்கா கொழும்பில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வங்காளதேசத்திற்கு எதிராக கொழும்பில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடக்கும் முதலாவது ஒரு நாள் போட்டியே, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நான் பங்கேற்கும் கடைசி ஆட்டமாகும். எனது கடைசி ஒரு நாள் போட்டியை பார்க்க வாருங்கள் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணியை என்னால் முன்னெடுத்து செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதற்குரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை என்னை விட சிறந்த வீரர் உருவெடுத்தால், தயக்கமின்றி அணியில் இருந்து ஒதுங்கி விடுவேன். இவ்வாறு மலிங்கா கூறினார்.