கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரகானே சேர்க்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது -கங்குலி + "||" + West Indies vs India: Sourav Ganguly Questions Shubman Gill And Ajinkya Rahane's ODI Exclusion

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரகானே சேர்க்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது -கங்குலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரகானே சேர்க்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது -கங்குலி
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரகானே சேர்க்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா, 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் அஜின்கியா ரகானே ஆகிய இருவரும் ஒருநாள் தொடரில்  சேர்க்கப்படாதது ஆச்சர்யம் அளிப்பதாக  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- "தேர்வுக்குழுவினர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அதே வீரர்களை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. இதனால் வீரர்களுக்கு நம்பிக்கை உண்டாகும். ஒரு சிலரே அனைத்து விதமாக போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார்கள்.

பெரிய அணிகளில் எப்போதும் நிலையான வீரர்கள் இருந்தனர். எல்லோரையும் மகிழ்விக்க வேண்டிய தேவையில்லை. நாட்டுக்காக விளையாட நிலையான வீரர்களை தேர்வு செய்வது அவசியம். அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் பலர் அனைத்து விதமாக கிரிக்கெட்டிலும் ஆடக்கூடயவர்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரகானே, சுப்மான் கில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் அதிக வெற்றி: கங்குலியின் சாதனையை முறியடித்தார், விராட்கோலி
வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் அதிக வெற்றிகள் பெற்றதன் மூலம், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலியின் சாதனையை விராட்கோலி முறியடித்தார்.
2. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து சோயிப் மாலிக் ஓய்வு பெற்றார்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் அறிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...