கிரிக்கெட்

இந்திய அணியின் அடுத்த பீல்டிங் பயிற்சியாளராகிறாரா? ஜான்டி ரோட்ஸ் + "||" + Jonty Rhodes India's next fielding coach? South African legend has big plans

இந்திய அணியின் அடுத்த பீல்டிங் பயிற்சியாளராகிறாரா? ஜான்டி ரோட்ஸ்

இந்திய அணியின் அடுத்த பீல்டிங் பயிற்சியாளராகிறாரா? ஜான்டி ரோட்ஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பம் அனுப்ப வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் மின்னஞ்சல் மூலம் கிரிக்கெட் வாரியத்திற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார். உலகின் மிகச்சிறந்த பீல்டர்களில் ஒருவராக விளங்கிய ஜான்டி ரோட்ஸ் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட  அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.