கிரிக்கெட்

டோனியின் தீவிர ரசிகன் நான்: மனம் மாறிய யோகராஜ்சிங் + "||" + I am MS Dhoni's fan': After blaming him for 'everything', Yograj Singh now calls MS Dhoni 'a legendary player

டோனியின் தீவிர ரசிகன் நான்: மனம் மாறிய யோகராஜ்சிங்

டோனியின் தீவிர ரசிகன் நான்: மனம் மாறிய யோகராஜ்சிங்
டோனியின் தீவிர ரசிகன் நான் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோகராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் நடுவரிசை பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் தந்தை யோகராஜ்சிங்.  கிரிக்கெட் வீரரான யோகராஜ்சிங், இந்திய அணியின் மூத்த வீரர் டோனியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். யுவராஜ்சிங் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டதற்கும் டோனிதான் காரணம் எனவும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யோகராஜ் சிங் விமர்சிக்க தவறமாட்டார். 

இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் 24 சேனலுக்கு பேட்டி அளித்த யோகராஜ் சிங், டோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். யோகராஜ் கூறுகையில்,  உலகக்கோப்பை தோல்விக்கு நான் தோனியை குற்றம் சொல்லவில்லை. அதை நான் சொல்லவே இல்லை” என்றார்.

தற்போது டோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடாமல், இரண்டு மாத ஓய்வு எடுத்துக் கொண்டு இராணுவத்திற்கு சென்றது குறித்து கேட்கப்பட்டது. அப்போது, சந்தேகமே வேண்டாம். டோனி நீண்ட காலமாக நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். அவர் ஒரு ஜாம்பவான். நானே ஒரு டோனி ரசிகர் தான்” என்றார். யோகராஜ் சிங்கின் இந்த பேட்டி, கிரிக்கெட் உலகில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.