கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 303 ரன்கள் சேர்ப்பு + "||" + Test against Ireland

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 303 ரன்கள் சேர்ப்பு

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 303 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
லண்டன், 

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 23.4 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்த நிலையில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்து 181 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட ஜாக் லீச் 92 ரன்களும், ஜாசன் ராய் 72 ரன்களும் எடுத்தனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.