கிரிக்கெட்

இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு ரூ.1.35 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி + "||" + Virat Kohli earns Rs 1.35 crore

இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு ரூ.1.35 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி

இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு ரூ.1.35 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார்.
மும்பை, 

சமுக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பல்வேறு தரப்பினர் கணக்கு தொடங்கி அதில் தங்களது கருத்துகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். பிரபலங்களின் பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். இதில் அவரை 3 கோடியே 62 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ. 1 கோடியே 35 லட்சத்தை ஊதியமாக பெறுகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியலில் கோலி 9-வது இடம் வகிக்கிறார். முதல் 10 இடங்களில் உள்ள வீரர்களில் கோலி மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ அதிகபட்சமாக ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.6¾ கோடி பெறுகிறார். ரொனால்டோவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 17 கோடியே 26 லட்சம் பேர் ஆவர்.