பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் -டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் -டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
x
தினத்தந்தி 26 July 2019 11:48 AM GMT (Updated: 26 July 2019 11:48 AM GMT)

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு தனது 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.  பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது அமீர் சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், 27 வயதான முகமது அமீர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில்,  பாகிஸ்தானுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்க உள்ளன. எனவே  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிற சமயத்தில் பாகிஸ்தான் தேர்வுக்குழு நன்குத் திட்டமிடுவதற்காக என்னுடைய ஓய்வை தற்போது அறிவித்துள்ளேன். இவ்வாறு  கூறியுள்ளார்.

மேலும்  பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முகமது அமீர், 119 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story