டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து வெற்றி


டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 26 July 2019 11:44 PM GMT (Updated: 26 July 2019 11:44 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

லண்டன்,

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) லண்டன் லார்ட்சில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 85 ரன்களும், அயர்லாந்து 207 ரன்களும் எடுத்தன. 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 303 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் அயர்லாந்துக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எளிய இலக்கை எட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது வெற்றியை அடையும் கனவுடன் 3-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்தின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்சும், ஸ்டூவர்ட் பிராட்டும் சிதறடித்தனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை இவர்கள் கச்சிதமாக பயன்படுத்தி கொண்டனர். விக்கெட்டுகளை கொத்து கொத்தாக பறிகொடுத்த அயர்லாந்து அணி 15.4 ஓவர்களில் வெறும் 38 ரன்னில் சுருண்டது. டெஸ்ட் வரலாற்றில் 7-வது குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் ஜேம்ஸ் மெக்கோலும் (11 ரன்) தவிர வேறு யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதன் மூலம் இங்கிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.


Next Story