கிரிக்கெட்

முகமது சமியின் விசா விண்ணப்பத்தை நிராகரித்த அமெரிக்கா + "||" + Mohammed Shami's US visa gets rejected initially, approved after BCCI letter: Source

முகமது சமியின் விசா விண்ணப்பத்தை நிராகரித்த அமெரிக்கா

முகமது சமியின் விசா விண்ணப்பத்தை நிராகரித்த அமெரிக்கா
இந்திய கிரிக்கெட் அணி வீரரான முகமது சமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர் முகமது சமியின் விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமது சமி தொடர்பாக போலீசார் அளித்துள்ள தகவல்களை சுட்டிக்காட்டி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள பிசிசிஐ, அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

தேவையான அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் முகமது சமி நிச்சயம் விளையாடுவார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. தன்னை  கொடுமைப்படுத்துவதாக முன்னாள் மனைவி ஹசின் ஜகான் அளித்த புகாரின் பேரில், முகமது சமி மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.