கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 173 ரன்கள் குவிப்பு + "||" + TNPL 20 Overcricket Dindigul Dragons scored 173 runs

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 173 ரன்கள் குவிப்பு

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 173 ரன்கள் குவிப்பு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 10-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். இதில் ஹரி நிஷாந்த்  17 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து வந்த விவேக் 11 ரன்னிலும், சதுர்வேத் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய ஆர்.அஸ்வின், ஜெகதீசன் உடன் கைக்கோர்க்க அணியின்  ஸ்கோர் உயர்ந்தது. இதில் அரைசதம் அடித்த ஜெகதீசன் 53 ரன்களிலும், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த  ஆர்.அஸ்வின் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின் முகமது 1 ரன்னிலும், ரோஹித் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் சுமந்த் ஜெயின் 26 ரன்னுடன் களத்தில் இருந்தார். 

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியில் தமிழ்குமரன், கணேஷ் மூர்த்தி, செந்தில் நாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி களமிறங்க உள்ளது.