கிரிக்கெட்

ரோகித் சர்மாவுடன் உரசல் வதந்தி, விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிக்கலாம் என தகவல் + "||" + Virat Kohli to skip press conference amid rift rumours with Rohit Sharma Report

ரோகித் சர்மாவுடன் உரசல் வதந்தி, விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிக்கலாம் என தகவல்

ரோகித் சர்மாவுடன் உரசல் வதந்தி, விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிக்கலாம் என தகவல்
ரோகித் சர்மாவுடன் உரசல் என்ற வதந்தி காரணமாக விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (சமுக வலைதளம்) பின்தொடரும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா திடீரென விலகி (அன்-பாலோ) இருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த செயல் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கும், அவருக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.

இந்திய அணியில் விராட்கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக சில வீரர்களும் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மாவின் சில ஆலோசனைகளை விராட்கோலி நிராகரித்ததாகவும், தனக்கு ஆதரவான வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இதுமட்டுமின்றி குறுகிய வடிவிலான போட்டிக்கு கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ரோகித் சர்மா, விராட்கோலி இடையிலான பனிப்போர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராயிடம் நேற்று கேட்ட போது, ‘இது நீங்களாக உருவாக்கும் கதை’ என்று சுருக்கமாக பதிலளித்தார். அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா விலகினாலும், விராட்கோலி, ரோகித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து தான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடருக்கு புறப்பட்டு செல்கிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்திய அணியின் கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் திங்கட்கிழமை விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவுடன் உரசல் என்ற  வதந்தி காரணமாக செய்தியாளர்கள் கேள்விகளை அவர் தவிர்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி தனது 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
4. பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்
பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.