கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் + "||" + Test series against Sri Lanka: 4 spinners in New Zealand

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.
வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்டில், அஜாஸ் பட்டேல், சோமெர்வில்லே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இலங்கை தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி வருமாறு:-


கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், டாம் பிளன்டெல், டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் பட்டேல், ஜீத் ராவல், சோமெர்வில்லே, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னெர், வாட்லிங்.