கிரிக்கெட்

இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த செல்பி + "||" + India vs West Indies: Virat Kohli shares image with teammates before team’s departure

இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த செல்பி

இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த செல்பி
இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த செல்பி படத்தைப் பகிர்ந்து உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு முன் விராட் கோலி எடுத்த செல்பியில் ரோகித் சர்மா இல்லாததால், இருவருக்குமான பிரச்சினை உண்மைதான் என்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது அடுத்த சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விராட் கோலி, நீங்கள் சொல்வதை கேள்விப்பட்டேன். ஓர் அணியின் வெற்றிக்கு ஓய்வு அறையில் நிலவும் சூழல் முக்கியமானது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால், நம்மால் நன்றாக விளையாடியிருக்க முடியாது.

ஒரு நபரை எனக்கு பிடிக்கவில்லை என்றால், நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதிலும், என் முகத்திலும் அதை நீங்கள் பார்க்கலாம். அது எளிமையான விஷயம். நான் எப்பொழுதும் ரோகித் சர்மாவை பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்தவர் என்பதை நம்புகிறேன். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒருவிதமான குழப்பம்தான். இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மியாமியை நோக்கி நேற்று புறப்படும் முன், இந்திய வீரர்கள் சிலருடன் விராத் கோலி செல்பி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த செல்பியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இதனால்,உங்களுக்குள் பிரச்சினை இல்லை என்றால் ரோகித்தை ஏன் புகைப்படத்தில் விட்டுவிட்டீர்கள்? என்று கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள். ரோகித் எங்கே என்றும், அவரை விட்டுவிட்டதால், பிரச்சினை இருப்பது உண்மைதான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தனது தொடக்க பங்குதாரர் ரோகித் ஷர்மாவுடன் ஒரு படத்தை ட்வீட் செய்து உள்ளார்.“எனது பங்குதாரர் - தி ஹிட் மேன்! என.