கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதங்கள் விளையாட தடை -பிசிசிஐ நடவடிக்கை


கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதங்கள் விளையாட தடை -பிசிசிஐ நடவடிக்கை
x
தினத்தந்தி 30 July 2019 3:27 PM GMT (Updated: 30 July 2019 3:46 PM GMT)

ஊக்க மருத்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதங்கள் விளையாட தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா 8 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட  ஊக்க  மருந்தை பயன்படுத்தியதால் பிரித்வி ஷா 8 மாதம் விளையாட பிசிசிஐ தடை  விதித்துள்ளது. 

எனவே பிரிதிவி ஷாவுக்கு நவம்பர் 15, 2019 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  அதாவது பிரிதிவி ஷா கடந்த பிப்ரவரி 22, 2019-ல் சையத் முஷ்டாக் அலி ட்ராபி போட்டிகளின் போது அளித்த சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட  ‘டெர்புடலின்’ என்ற மருந்து இருந்துள்ளது.

பிரிதிவி ஷா மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளுக்காக இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதில் இந்த டெர்புடலைன் இருந்ததால் அவர் கவனக்குறைவாகத் தெரியாமல் இதை எடுத்துக் கொண்டார், இது வாடாவினால் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தாகும்.    தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Next Story