கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ் + "||" + Venugopal Rao Retires From All Forms Of Cricket

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
அமராவதி,

இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் நேற்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 37 வயதான இவர் இதுவரை இந்தியாவிற்காக 16 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 218 ரன்கள் எடுத்துள்ளார்.

 2006 ஆம் ஆண்டு அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே இவரது அதிகபட்சமாகும். ஆந்திராவை சேர்ந்த நடுத்தர வரிசை ஆட்டக்காரரான இவர் 2005 ஆம் ஆண்டு தம்புலாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். 

மார்ச் 2006 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் விளையாடிய கடைசி ஒரு நாள் போட்டி இதுவாகும். இவர் இதுவரை 121 முதல் தர போட்டிகளில் விளையாடி 17 சதங்களும், 30 அரை சதங்களும் அடித்துள்ளார். 2008 முதல் 2014 வரை 65 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் எடுத்துள்ளார்.