கிரிக்கெட்

புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அன்ஷூமன் கெய்க்வாட் + "||" + Virat Kohli's comments on Ravi Shastri will not influence CAC: Anshuman Gaekwad

புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அன்ஷூமன் கெய்க்வாட்

புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அன்ஷூமன் கெய்க்வாட்
புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அன்ஷூமன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
மும்பை,

கேப்டன் விராட் கோலியின் தலைமையில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய அணி, அந்தநாட்டுடன் மூன்று டி-20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் முதல் இரண்டு டி-20 போட்டிகள் அமெரிக்காவின் லாடர்ஹில்லில் நடைபெற உள்ளது. மற்ற போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும். ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கிடையே தொடங்க உள்ளது.

உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பதவி காலியாக உள்ளது. புதிய பயிற்சியாளருக்கான தேர்வு செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பயிற்சியாளர் நியமிக்கப்படாததால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 45 நாட்களுக்கு பதவி காலத்தை பிசிசிஐ நீட்டிப்பு செய்துள்ளது.

புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வந்து விட்டன. இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது ராபின் சிங் மற்றும் டாம் மூடி ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ராபின் சிங் இந்திய அணியில் ஏற்கனவே பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி,  ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தலைமை பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

45 நாட்களுக்குள் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரியிடம் நல்ல நட்புறவுடன் இருக்கின்றோம். மீண்டும் அவர் பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து என்று கூறியிருந்தார். 

இந்தநிலையில், இதற்கு பதில் அளித்து பேசிய பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அன்ஷூமன் கெய்க்வாட், இந்திய அணிக்கு பயிற்சியாளர் தேர்வு செய்வதற்கு சில தகுதிகளை அடிப்படையாக வைத்து உள்ளோம். அந்த தகுதிக்கு ஏற்ப மீண்டும் ரவிசாஸ்திரி தேர்வானால் நிச்சயம் அவரை கணக்கில் கொள்வோம். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
2. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி
டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தை பறிகொடுத்துள்ளார்.
3. உங்கள் ஈகோவை நீக்குங்கள்: விராட் கோலி படிக்கும் புத்தகம்
இந்திய கேப்டன் விராட் கோலி உங்கள் ஈகோவை நீக்குங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
4. கருப்பு பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று விளையாடுவார்கள் என பிசிசிஐ தகவல்
அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.
5. இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த செல்பி
இந்திய அணி புறப்படுவதற்கு முன்பு விராட் கோலி சக வீரர்களுடன் எடுத்த செல்பி படத்தைப் பகிர்ந்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...