கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்சில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார் ரூதர்போர்டு + "||" + From Delhi Capital Rutherford has moved to the Mumbai Indians

டெல்லி கேப்பிட்டல்சில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார் ரூதர்போர்டு

டெல்லி கேப்பிட்டல்சில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறினார் ரூதர்போர்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்கண்டே 2018–ம் ஆண்டு தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்கண்டே 2018–ம் ஆண்டு தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால் இந்த ஆண்டில் அவருக்கு 3 போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மயங்க் மார்கண்டேவை பரிமாற்றம் செய்து இருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அவரை விட்டுக்கொடுத்து இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வெஸ்ட்இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ரூதர்போர்டை வாங்கி இருக்கிறது. ரூதர்போர்டு கடந்த சீசனில் ரூ.2 கோடிக்கு ஏலம் போனவர் ஆவார்.