கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: 2 ஆயிரம் விண்ணப்பங்கள்; யாருக்கு அதிக வாய்ப்பு? + "||" + BCCI receives over 2000 applications for Team India head coach position - Report

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: 2 ஆயிரம் விண்ணப்பங்கள்; யாருக்கு அதிக வாய்ப்பு?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: 2 ஆயிரம் விண்ணப்பங்கள்; யாருக்கு அதிக வாய்ப்பு?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளன. யாருக்கு அதிக வாய்ப்பு என விரைவில் தெரிய வரும்.
புதுடெல்லி,

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சஞ்சய் பாங்கர் (பேட்டிங்), பாரத் அருண் (பவுலிங்), ஸ்ரீதர் (பீல்டிங்) உள்ளிட்ட 7 பேரின் பதவிக்காலம் வரும் வெஸ்ட் இண்டீஸ்  தொடருடன் முடிகிறது. புதிய பயிற்சியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் (ஜூலை 31) அவகாசம் முடிந்தது.

இதுவரை 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து  உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கவில்லை என்ற போதிலும், தேர்வில் பங்கேற்கலாம். இதனிடையே 2007ல் இந்தியாவுக்கு 'டுவென்டி-20' உலக கோப்பையை வென்று தந்த லால்சந்த் ராஜ்புட், ராபின் சிங் (பீல்டிங்), பிரவீண் ஆம்ரே உள்ளிட்டோர் போட்டியில் குதித்துள்ளனர். சர்வதேச அளவில் ஜெயவர்தனா (இலங்கை), டாம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹசன் (நியூசிலாந்து) உள்ளிட்டோர் பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், பீல்டிங் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இவர்களில் சரியான பயிற்சியாளரை, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நியமிக்கப்பட்ட கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தேர்வு செய்ய உள்ளது.

 தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், பீல்டிங் பயிற்சியாளருக்கு  தனது விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையிலான குழு, மற்ற பயிற்சியாளர்களை முடிவு செய்ய உள்ளது. வரும் அக்டோபர்  22ல் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பயிற்சியாளர் யார் என்பது முடிவு செய்யப்படலாம். தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.