கிரிக்கெட்

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் கபில்தேவ் சொல்கிறார் + "||" + We will add value to Viratkoli's comment Says Kapildev

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் கபில்தேவ் சொல்கிறார்

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலியின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் கபில்தேவ் சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் நடக்கிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடித்தால் நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவோம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இது குறித்து கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட்டிடம் கருத்து கேட்ட போது, ‘விராட்கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் சுயமாக செயல்படுவோம்’ என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கபில்தேவ் கருத்து தெரிவிக்கையில், ‘பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட்கோலி உள்பட ஒவ்வொருவரின் கருத்துக்கும் நாங்கள் மதிப்பு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பயிற்சியாளர் தேர்வு பணி கடினமான வி‌ஷயம் அல்ல. நமது திறமைக்கு ஏற்ப கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டார். கமிட்டி உறுப்பினர்களில் மற்றொருவரான சாந்தா ரங்கசாமி கூறுகையில், ‘பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து சொல்ல விராட்கோலிக்கு உரிமை உண்டு. பயிற்சியாளர் யார் என்பதை நாங்கள் 3 பேரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம்’ என்றார்.