கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு + "||" + TNPL Cricket Chapeauk Super Gillies team won the toss Elected to bat

டி.என்.பி.எல். கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும்  காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் ஆகிய அணிகளை வரிசையாக புரட்டியெடுத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 புள்ளிகளுடன் தற்போது 3–வது இடத்தில் உள்ளது.

காஞ்சி வீரன்ஸ் அணியும் கில்லீஸ் போன்று முதல் ஆட்டத்தில் தோற்று அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வெற்றியோடு எழுச்சி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. 

மொத்தத்தில் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் காஞ்சி வீரன்ஸ் அணியும் வலுவுடன் இருப்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்-பெரியசாமி அசத்தல் பந்து வீச்சு
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 2-வது முறையாக சொந்தமாக்கியது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் ‘பிளே-ஆப்’ சுற்று: திண்டுக்கல் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயம் செய்துள்ளது.
4. டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.