கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி ஆர்வம் + "||" + Definitely I want to become India coach may apply after one more phase Sourav Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி ஆர்வம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி ஆர்வம்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற விருப்பத்தை சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பணிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிகிறது. இந்நிலையில் இந்திய  அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் இருந்து கவனிக்கத்தக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் பேசிய கங்குலி, நானும்  ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராவதற்கான லட்சியங்களை வளர்த்து  கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கங்குலி பேசுகையில், நிச்சயமாக, பயிற்சியாளராக எனக்கும் ஆர்வமுள்ளது. இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் இல்லை. இன்னும் ஒரு கட்டம் போகட்டும் அப்போது பயிற்சியாளர் களத்தில் என்னுடைய பெயரையும் இடம்பெற செய்வேன். இப்போது பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன். ஐபிஎல், சிஏபி, தொலைக்காட்சி வர்ணனை என மேற்கொள்ளும் பணிகளை முதலில் நிறைவு செய்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் இந்தியப் பயி்ற்சியாளராவேன். நிச்சயமாக எனக்கு ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்பதில் நாட்டம் உள்ளது.

இப்போது தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இப்போதைய தேர்வுக்கு ஜெயவர்தனே  விண்ணப்பிப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அது தென்படவில்லை.  தேர்வுக்குழு என்ன முடிவெடுக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. சாஸ்திரி பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி என் கருத்தை நான் இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. பயிற்சியாளரைத் தீர்மானிக்கும் அமைப்பு முறையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன். இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாகவே உள்ளது.  இந்தியாவிற்கு சவாலான அளவிலே போட்டிகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு
இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் 16-ந்தேதி நடக்கிறது
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 16-ந்தேதி நடக்கிறது.
3. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வாகிறார்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: 2 ஆயிரம் விண்ணப்பங்கள்; யாருக்கு அதிக வாய்ப்பு?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளன. யாருக்கு அதிக வாய்ப்பு என விரைவில் தெரிய வரும்.
5. முகமது சமியின் விசா விண்ணப்பத்தை நிராகரித்த அமெரிக்கா
இந்திய கிரிக்கெட் அணி வீரரான முகமது சமியின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.