கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி - ஜெகதீசன் சதம் + "||" + TNPL Cricket Dindigul Dragons won by 5 wickets

டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி - ஜெகதீசன் சதம்

டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி - ஜெகதீசன் சதம்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 20-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது.

திருச்சி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 99 ரன்களும், கே.முகுந்த் 43 ரன்களும் எடுத்தனர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஜெ.கவுசிக் 2 விக்கெட்டுகளும்,  முகமது 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை (182 ரன்கள்) எட்டியது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் சதம் அடித்து அசத்தினார். பொறுப்புடன் அணியின் வெற்றிக்காக போராடிய ஜெகதீசன் 105 (60) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல்  களத்தில் இருந்தார். மேலும் விவேக் 29 ரன்கள் எடுத்தார்.

திருச்சி வாரியர்ஸ் அணியில்  சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும், சரவணகுமார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.