கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது + "||" + Karaikudi-Coimbatore teams clash today Happening in Chennai

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காரைக்குடி காளை–கோவை கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி (1 வெற்றி, 4 தோல்வி) ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அதே சமயம் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிக்கு (2 வெற்றி, 3 தோல்வி) இது வாழ்வா–சாவா ஆட்டமாகும். தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும். இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 4–ல் கோவையும், ஒன்றில் காரைக்குடியும் வெற்றி பெற்று இருக்கிறது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3, விஜய் சூப்பர் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறும். ரூ.100, ரூ.200 விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.