கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் 133 ரன்கள் சேர்ப்பு + "||" + TNPL Cricket Kanchi Virans scored 133 runs

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் 133 ரன்கள் சேர்ப்பு

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் 133 ரன்கள் சேர்ப்பு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா மற்றும் அருண் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். இதில் அருண் 12 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய பாபா அபராஜித் ரன் எதுவும் எடுக்காமலும், சஞ்சய் யாதவ் மற்றும் பிரான்சிஸ் ரோக்கின்ஸ் ஆகியோர் தலா 2 ரன்னிலும், ஆர்.சதீஷ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த விஷால் வைத்யா 51 ரன்களில் கேட்ச் ஆனார்.

அதற்கு பின் ஹரிஷ் 8 ரன்னிலும், கவுதம் தாமரை கண்ணன் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில் லோகேஷ்வர் 26 ரன்னுடனும், சுதேஷ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சார்பாக அபினவ் 3 விக்கெட்டுகளும், ஹரி நிஷாந்த் 2 விக்கெட்டுகளும், எம். சிலம்பரசன் மற்றும் ஆர்.அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்க உள்ளது.