கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் - கயானாவில் இன்று நடக்கிறது + "||" + The last 20-over cricket match between India and West Indies - taking place in Guyana today

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் - கயானாவில் இன்று நடக்கிறது

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் - கயானாவில் இன்று நடக்கிறது
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது.
கயானா,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள புரோவிடென்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

போட்டி தொடரை வென்று விட்டதால் இந்திய அணியில் ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். ரிஷாப் பண்ட் 2 ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. மனிஷ் பாண்டே, ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகியோரும் களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியில் ரோகித் சர்மா மட்டுமே அரைசதம் அடித்தார். மற்ற எந்தவொரு பேட்ஸ்மேனும் எதிர்பார்த்தபடி ரன் சேர்க்கவில்லை. ஆனால் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்திய அணியின் பேட்டிங் இன்னும் ஏற்றம் பெற வேண்டியது அவசியமானதாகும்.. வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தமட்டில் பொல்லார்ட், ரோவ்மன் பவெல் தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் பந்து வீச்சு பாராட்டும் வகையில் இல்லை.

இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்ல முனைப்பு காட்டும். அதேநேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெற முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இதுவரை 13 முறை 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 7 ஆட்டத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 5 ஆட்டத்திலும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 1, சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

20 ஓவர் போட்டி தொடருக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

வெஸ்ட் இண்டீஸ்:- கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), சுனில் நரின், கீமோ பால், கேரி பியர், பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ரோவ்மன் பவெல், ஜாசன் முகமது, ஒஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஜான் கேம்ப்பெல், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மயர், இவின் லீவிஸ்

தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வார்னர், பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி
மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஊதித்தள்ளியது.
2. “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.
3. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
4. இந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை: ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் கடிதம்
இந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை என ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
5. இந்தியா-இலங்கை மூன்றாவது 20 ஓவர் போட்டி - இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்கு
இந்திய அணியுடனான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.