கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு + "||" + South African quick Dale Steyn retires from Test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்டெயின் ஓய்வு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஜோகன்ஸ்பெர்க்,

தென்னாப்பிரிக்காவின் வேகப்புயல் என்று அழைக்கப்படும் டேல் ஸ்டெயின் . காயம் காரணமாகத் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டெயின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 2004-ம் ஆண்டு அறிமுகமான ஸ்டெயின். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். இவர் 92 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பைத் தொடருக்குத் தேர்வான ஸ்டெயின் காயம் காரணமாக அதிலிருந்து விலகினார். இந்நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.