கிரிக்கெட்

மாவட்ட வீரர்களின் கனவை நனவாக்குகிறது, டி.என்.பி.எல். - அம்பத்தி ராயுடு பாராட்டு + "||" + The dream of district players comes true, TNPL - Compliment of Ambati Rayudu

மாவட்ட வீரர்களின் கனவை நனவாக்குகிறது, டி.என்.பி.எல். - அம்பத்தி ராயுடு பாராட்டு

மாவட்ட வீரர்களின் கனவை நனவாக்குகிறது, டி.என்.பி.எல். - அம்பத்தி ராயுடு பாராட்டு
டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் மாவட்ட வீரர்களின் கனவை நனவாக்குவதாக அம்பத்தி ராயுடு பாராட்டு தெரிவித்தார்.
திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்க திண்டுக்கல் வருகை தந்த இந்திய முன்னாள் பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான அம்பத்தி ராயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

நத்தம் மைதானத்தை பார்த்ததும் உண்மைலேயே நான் ஈர்க்கப்பட்டேன். டி.என்.பி.எல். தொடர் எவ்வளவு சிறந்தது என்பதை இது காட்டுகிறது. ஆர்.அஸ்வின் போன்ற அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்கள் விளையாடுவதை பார்க்க முடிகிறது. எங்களது சிறு வயதில் இது போன்ற போட்டிகளில் ஒரு போதும் பங்கேற்றதில்லை. இது தேசிய அணியில் இடம் பிடிப்பதற்கு ஒரு தளத்தை அமைத்து தருகிறது. உயரிய, பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்று எப்போதும் கனவு காணும் சிறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கிறது. இது மட்டுமின்றி டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தரமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அம்பத்தி ராயுடு கூறினார்.