கிரிக்கெட்

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு சுனில்ஜோஷி விண்ணப்பம் + "||" + Sunil Joshi applies for the post of Indian bowling coach

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு சுனில்ஜோஷி விண்ணப்பம்

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு சுனில்ஜோஷி விண்ணப்பம்
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு சுனில்ஜோஷி விண்ணப்பம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி விண்ணப்பம் செய்துள்ளார். 49 வயதான சுனில் ஜோஷி வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக 2½ ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டியில் விளையாடி 41 விக்கெட்டும், 69 ஒருநாள் போட்டியில் ஆடி 69 விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.


சுனில் ஜோஷி கூறுகையில் ‘நான் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். வங்காளதேச அணியுடனான இரண்டரை ஆண்டு கால பயனுள்ள பயிற்சி காலத்துக்கு பிறகு அடுத்த சவாலுக்கு தயாராக இருக்கிறேன். கொஞ்ச காலமாக இந்திய அணியில் சுழற்பந்து வீச்சுக்கு என பிரத்யேக பயிற்சியாளர் இல்லை. இந்த தேர்வில் எனது அனுபவத்தை கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். பல சர்வதேச அணிகள் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரை பயன்படுத்தி வருகின்றன. இந்திய அணிக்கு சிறப்பு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையாகும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்திய அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார்’ - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை தெரிவித்தார்.
2. ‘இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ - விராட்கோலி கருத்து
‘வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
3. இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் விடுவிப்பு
இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
4. ‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து
வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.
5. இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு 31-வது பிறந்த நாள்: கிரிக்கெட் உலகினர் வாழ்த்து
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் 31-வது பிறந்த நாளான நேற்று கிரிக்கெட் உலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.