ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிப்பு: மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு சிக்கல் ?


ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிப்பு: மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு சிக்கல் ?
x
தினத்தந்தி 7 Aug 2019 5:41 AM GMT (Updated: 7 Aug 2019 5:41 AM GMT)

புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கிலிருந்து வெளிவரும் கிரிக்கெட் வீரர்கள் முதல்-தர மற்றும் உள்ளுர் போட்டிகளில் ஜம்மு-காஷ்மிர் அணியையே பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று இந்திய நிர்வாகிகள் குழு (சிஓஏ) தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கிலிருந்து வெளிவரும் கிரிக்கெட் வீரர்கள்  முதல்-தர மற்றும் உள்ளுர் போட்டிகளில்  ஜம்மு-காஷ்மீர் அணிக்கே  விளையாடுவார்கள்  என்று இந்திய கிரிக்கெட்  குழு (சிஓஏ) தலைவர் வினோத் ராய்  தெரிவித்துள்ளார்.

திங்களன்று ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாகின, ஆனால் பி.சி.சி.ஐ கிரிக்கெட் விளையாட்டு ரீதியில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய நிர்வாகிகள் குழு (சிஓஏ) தலைவர் வினோத் ராய்  கூறியதாவது ;

"நாங்கள் லடாக்கிற்கு ஒரு தனி மாநில அமைப்பு வழங்குவது குறித்து யோசிக்கவில்லை. அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த வீரர்கள் அனைத்து பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளிலும் ஜம்மு-காஷ்மீரை பிரதிநிதித்துவத்திற்குத் தகுதி பெறுவார்கள்.

கடந்த ஆண்டைப் போலவே உள்ளுர் போட்டிகள் அனைத்தும்  ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நடத்தப்படும் என்றும் மேலும் ஆடுகளம் மாற்றம் குறித்தும் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு இறுதியில்  தொடங்க உள்ள  ரஞ்சி டிராபி போட்டியில் இரு யூனியன் பிரதேச  கிரிக்கெட் வீரர்களும்  ஜம்மு-காஷ்மீரை  பிரதிநிதித்துவப்படுத்தியே விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story