20 ஓவர் உலகக்கோப்பை தகுதி சுற்று : ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்குப் பதிலாக நைஜீரியா அணி தேர்வு


20 ஓவர் உலகக்கோப்பை தகுதி சுற்று : ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்குப் பதிலாக நைஜீரியா அணி தேர்வு
x
தினத்தந்தி 8 Aug 2019 4:56 AM GMT (Updated: 8 Aug 2019 4:56 AM GMT)

நிர்வாகச் சீர்கேட்டுப் பிரச்சினைகளால் ஐசிசி-யினால் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக நைஜீரியா அணியை உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.

நிர்வாகச் சீர்கேட்டுப் பிரச்சினைகளால் ஐசிசி-யினால் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக நைஜீரியா அணியை   20 ஓவர் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. அதே போல் ஜிம்பாப்வே தடையினால் மகளிர் உலக 20 ஓவர் உலகக்கோப்பை தகுதி சுற்றுகளில் நமீபியா மகளிர் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபரில் தொடங்குகிறது, இதில் நைஜீரியா, யுஏஇ, ஹாங்காங், அயர்லாந்து, ஜெர்சி, கென்யா, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பபுவா நியுகினியா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர்.இந்தத் தகுதிச் சுற்றுகளில் டாப் 6 அணிகள் 2020   20 ஓவர் உலகக்கோப்பை போட்டித் தொடரில் நுழையும்.

 20 ஓவர் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் இந்த டாப் 6 அணிகள் வங்கதேசம், இலங்கை ஆகியவற்றுடன் முதல் சுற்றில் இணையும். இந்த 8 அணிகள் 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதிலிருந்து ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் டாப் 2 அணிகள், ஆக மொத்தம் 4 அணிகள் பிரதானச் சுற்றில் மோதும் 8 அணிகளுடன் இணைந்து உலக டி20 சூப்பர் 12 அணிகளுக்கு இடையிலான தொடராக நடைபெறும்.2020  20 ஓவர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story