கிரிக்கெட்

காஷ்மீரில் டோனிக்கு எதிராக பூம் ... பூம் .. அப்ரிடி கோஷங்கள் + "||" + VIDEO: MS Dhoni received with ‘boom, boom Afridi’ chants in Kashmir

காஷ்மீரில் டோனிக்கு எதிராக பூம் ... பூம் .. அப்ரிடி கோஷங்கள்

காஷ்மீரில் டோனிக்கு எதிராக பூம் ... பூம் .. அப்ரிடி கோஷங்கள்
காஷ்மீரில் டோனிக்கு எதிராக பூம் ... பூம் .. அப்ரிடி கோஷங்கள் கொண்ட வீடியோ பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டோனி அடுத்த இரண்டு மாதங்களுக்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட வேண்டி கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கினார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்திய இராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனல் என்ற பதவியில் இருக்கும் டோனிக்கு எளிதாக இராணுவ அனுமதியும் கிடைத்தது.

அதன் பின் ஜூலை 30 முதல் 16 நாட்களுக்கு காஷ்மீரில் இராணுவ பணியில் ஈடுபட்டு வருகிறார் டோனி. 106 டிஏ என்னும் தரைப்படையுடன் டோனி இணைந்தார். ஆகஸ்ட் 15 வரை அந்த படையினருடன் டோனி காஷ்மீரில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதனால், காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீரில் பரபரப்பான சூழ்நிலை நிலவும் நிலையில் தோனி பாரமுல்லா பகுதியில் இராணுவத்தினருடன் பொது மக்கள் இருக்கும் பகுதி அருகே சென்று உள்ளார். அங்கே தோனிக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அவருக்கு சில காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு பெயரை குறிப்பிட்டு, டோனிக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ பாகிஸ்தானில் வேகமாக பரவி வருகிறது. அங்கே உள்ள செய்தி தொலைக்காட்சிகளில் அந்த வீடியோவை ஒளிபரப்பி பரபரப்பை கூட்டி வருகிறார்கள்.

தங்கள் எதிர்ப்பை குறிப்பாக உணர்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியை குறிப்பிட்டு, "பூம் பூம் அப்ரிடி" என அவரது பட்டப் பெயருடன் சேர்த்து கோஷமிட்டனர். இந்த கோஷத்தின் மூலம் டோனிக்கு எதிர்ப்பும் தெரிவித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவும் தெரிவித்ததாக கருதப்படுகிறது.

இந்த காட்சிகள் இடம் பெற்ற வீடியோ ஒன்று பாகிஸ்தானில் பரவி வருகிறது, அங்கு உள்ள செய்தித் தொலைக்காட்சிகளில் இதை ஒளிபரப்பி வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இது மேலும் பரபரப்பை கூட்டி இருக்கிறது.

நல்லவேளையாக டோனிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது. டோனி தொடர்ந்து இராணுவத்தில் தன் பணியை தொடர்ந்து, பின் ஆகஸ்ட் 31 அன்று திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. விஸ்வரூபம் எடுக்கும் அம்ரபாலி மோசடி விவகாரம்: கிரிக்கெட் வீரர் டோனி சிக்குவாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அம்ரபாலி மோசடி விவகாரத்தில் பிரச்சினை வருகிறது.
2. அடுத்த வருட ஐ.பி.எல்லுக்கு பின் வருங்காலம் பற்றி டோனி முடிவு
அடுத்த வருட ஐ.பி.எல். போட்டிக்கு பின் டோனி தனது வருங்காலம் பற்றி முடிவு செய்வார் என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவித்து உள்ளது.
3. அமித்ஷாவை, டோனியுடன் ஒப்பிட்டு டுவிட்டர் பதிவுகள் - ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைப்பார்கள்
அமித்ஷாவை, டோனியுடன் ஒப்பிட்டு ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைப்பார்கள் என டுவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.
4. 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம்
மெக்காஃபியின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள் 2019 பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடத்தில் உள்ளார்.
5. தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை - பிசிசிஐ தலைவர் கங்குலி
தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.