கிரிக்கெட்

குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: ஊதிய பிரச்சினையால் யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு + "||" + Yuvraj Singh-Led Global T20 Canada Team Refuses To Play Over Unpaid Wages: Reports

குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: ஊதிய பிரச்சினையால் யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு

குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்:  ஊதிய பிரச்சினையால் யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு
குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டம் தாமதாக தொடங்கி நடைபெற்று முடிந்தது.
வட அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கனடா 20 -20 குளோபல் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கலந்து கொண்டுள்ளார். டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக  உள்ளார். 

 இந்த தொடரில் மொண்ட்ரியல் டைகர்ஸ் அணியும் டொரண்டோ நேஷனல்ஸ் அணியும் நேற்று மோதின. முன்னதாக,  யுவராஜ் சிங் உள்பட இரு அணி வீரர்களும் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து, போட்டி நடைபெறும் இடத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து ஹோட்டல்களிலேயே இருந்தனர். 

இதையடுத்து, தொடரை நடத்தும் அமைப்பு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, ஆட்டம் தாமதமாக துவங்கி நடைபெற்று முடிந்தது.  தாமதமாக துவங்கி நடைபெற்ற இந்த போட்டியில் யுவராஜ் தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான மோண்ட்ரியல் டைகர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...