கிரிக்கெட்

ஹெட்ஸ் அப் சேலன்ஞ்ச் : விராட் கோலியை கண்டுபிடித்த ரோகித் சர்மா + "||" + Ravindra Jadeja mimics Virat Kohli's batting stance, Rohit Sharma guesses correctly in Heads Up Challenge

ஹெட்ஸ் அப் சேலன்ஞ்ச் : விராட் கோலியை கண்டுபிடித்த ரோகித் சர்மா

ஹெட்ஸ் அப் சேலன்ஞ்ச் : விராட் கோலியை கண்டுபிடித்த ரோகித் சர்மா
ரவீந்திர ஜடேஜாவும் ரோகித் சர்மாவும் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடிய வீடியோவை பிசிசிஐ அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கயானா,

தற்போது வெஸ்ட் இண்டிஸ் சுற்றுபயணம் சென்றுள்ள இந்தியா கிரிக்கெட் அணி, டி20, ஓடிஐ, டெஸ்ட் தொடர்கள் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை இந்தியா கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவும் ரோகித் சர்மாவும் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

ரோகித், அட்டையில் ஒரு வீரரின் பெயரை தன் தலையின் மேல் வைத்து காட்ட, ஜடேஜா அவரை போல் நடித்து காட்ட வேண்டும். அதனை ரோகித் கண்டுபிடிக்க வேண்டும் இது தான் ‘ஹெட்ஸ் அப், எனும் விளையாட்டாகும்.

முதலில் பும்ராவின் பெயர் அட்டையில் இருந்தது. ஜடேஜா, பும்ரவை போல் பந்துவீச்சி காட்ட, அதனை சரியாக கணித்தார் ரோகித் சர்மா. அதன் பின் வந்த பெயர் விராத் கோலி.அதனை பார்த்தவுடன் ஜடேஜா வாய்விட்டு சிரித்தார். இதனை சற்று தூரத்தில் இருந்து கோலி பார்த்து கொண்டிருந்தார். பின்பு கொஞ்ச நேரத்திற்கு பின்பு ஜடேஜா நடித்து காட்டும் வீரர் கோலி என கண்டு பிடித்தார் ரோகித்.

 கோலி – ரோகித் இடையே மோதல் என வெளியாகும் செய்திகள் பொய் என உணர்ந்த்தவே  பிசிசிஐ இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது வெஸ்ட் இண்டிஸ் சுற்றுபயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஓடிஐ, டெஸ்ட் தொடர்கள் விளையாடுகிறது. டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.