டோனியின் ஆடம்பர கார் வரிசையில் சேர்ந்த மற்றொரு கார்


டோனியின் ஆடம்பர கார் வரிசையில் சேர்ந்த மற்றொரு கார்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:23 AM GMT (Updated: 10 Aug 2019 10:23 AM GMT)

டோனியின் புதிய பொம்மை என கார் படத்தை வெளியிட்ட சாக்ஷி சிங் டோனி.

உலக கோப்பை  போட்டியில் இந்தியா வாய்ப்பை இழந்த பிறகு மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் செயலில் உள்ள கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத இடைவெளி எடுத்து உள்ளார். தற்போது ஜம்மு-காஷ்மீரில் பிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வருகிறார் டோனி. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு  ஃபெராரி 599, ஜி.டி.ஓ, ஹம்மர் எச் 2, ஜி.எம்.சி சியரா உள்ளிட்ட நான்கு உயர் ரக கார்களை வைத்து உள்ளார். 

 இரு சக்கர வாகனங்களில், கவாஸாகி நிஞ்ஜா எச் 2, கான்ஃபெடரேட் ஹெல்காட், பிஎஸ்ஏ, சுசுகி ஹயபுஷா மற்றும் ஒரு நார்டன் விண்டேஜ் போன்ற பல பெரிய பைக்குகளை வைத்து உள்ளார்.

இந்த நிலையில் எம்.எஸ்.டோனியின் மனைவி சாக்ஷி சிங் டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கணவரின் புதிய "பொம்மை" என்று ஒரு கார் படத்தை வெளியிட்டு உள்ளார்.அதன் குடியுரிமைக்காக காத்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

டோனியின் புதிய பொம்மை ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் ஆகும். இது ஒரு நடுத்தர  எஸ்யூவி, இது சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட 6.2 எல் ஹெமி வி 8 எஞ்சின் கொண்டுள்ளது. சாக்ஷி டோனியின் கூற்றுப்படி, இது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.



Next Story